ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்
திருச்சுழி பகுதிகளில் ரோந்து பணிைய தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
திருச்சுழி,
திருச்சுழி பகுதிகளில் ரோந்து பணிைய தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கண்காணிப்பு பணி
திருச்சுழியில் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளது. இதன் கட்டுப்பாட்டில் திருச்சுழி, ம.ரெட்டியபட்டி, பரளச்சி உள்பட 7 போலீஸ் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்த போலீஸ்நிலையங்களின் கண்காணிப்பில் 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
ஆனால் இப்பகுதி மக்கள்தொகைக்கு ஏற்ப போலீசார் எண்ணிக்கை இல்லை. குறைந்த எண்ணிக்கையில் போலீசார் இருப்பதால் ரோந்து பணியில் தொய்வு ஏற்பட்டு குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ரோந்து பணி
இதை தடுக்க ஒவ்வொரு பகுதியிலும் 24 மணிநேரமும் போலீசார் ரோந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். அதேபோல திருச்சுழியில் எண்ணற்ற பேர் மது அருந்தி விட்டு வாகனங்களை ஓட்டுகின்றனர். இதனால் அடிக்கடி சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. அதேேபால இந்த பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெறுகிறது. இந்த சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிப்பதிலும் சிக்கல் உள்ளது.
எனவே திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு சரகத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் போதிய போலீசாரை நியமித்து, ரோந்து பணியை தீவிரப்படுத்தி குற்றச்சம்பவங்களை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.