பத்திரகாளி அம்மன் கோவிலில் மாசித்திருவிழா
உடன்குடி கொட்டங்காடு பத்திரகாளி அம்மன் கோவிலில் மாசித்திருவிழா நடந்தது.;
உடன்குடி:
உடன்குடி கொட்டங்காடு தேவி ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோவிலில் மாசித்திருவிழா மற்றும் மகாசிவராத்திரி விழா நடந்தது. நேற்று முன்தினம் பவள முத்து விநாயகர், பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. சிவராத்திரி பூஜையை முன்னிட்டு நேற்று பவள முத்து விநாயகர், பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு படையல், 108 திருவிளக்கு பூஜை, அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் உள்பிரகார சப்பர பவனி, ஊஞ்சல் சேவை அன்னதானம் ஆகியவை நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா சுந்தரஈசன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.