தாலுகா அலுவலகத்தில் நுழைந்த பசுமாடு

பந்தலூரில் தாலுகா அலுவலகத்தில் பசுமாடு நுழைந்தது.;

Update:2023-10-26 02:30 IST

பந்தலூர் தாலுகா அலுவலகத்துக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் பல்வேறு சான்றிதழ் தேவைக்காக வந்து செல்கின்றனர்.

இதற்கிடையில் அந்த பகுதியில் கால்நடைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அவை சாலைகளிலும், பஜார் பகுதிகளிலும் கூட்டமாக உலா வருவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.இந்த நிலையில் நேற்று பந்தலூர் தாலுகா அலுவலகத்துக்குள் பசுமாடுநுழைந்தது. இதை கண்ட அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். மேலும் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் கால்நடைகள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்