பயணிகளிடம் சில்லறை கேட்டு நிர்பந்திக்கக் கூடாது - போக்குவரத்துத்துறை உத்தரவு

பயணிகளிடத்தில் சில்லறை தொடர்பான விவாதங்களை தவிர்த்து, கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.;

Update: 2023-11-01 10:00 GMT

சென்னை,

மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் டிக்கெட்டுக்கு உரிய சில்லறையுடன் பயணிக்க வேண்டும் என்று நடத்துனர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.

இந்த நிலையில் பேருந்துகளில் பயணிகளிடம் சில்லறை கேட்டு நிர்பந்திக்கக் கூடாது என்றும் டிக்கெட்டுக்கு பயணிகள் அளிக்கும் பணத்தைப் பெற்று டிக்கெட் கட்டணம் போக மீதி தொகையை வழங்க வேண்டும் என்றும் நடத்துனர்களுக்கு போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பயணிகளிடத்தில் சில்லறை தொடர்பான விவாதங்களை தவிர்த்து, கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் இது தொடர்பாக புகார்கள் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட நடத்துனர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்