சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலை நடுவழியில் நிறுத்தி பயணிகள் போராட்டம்

ஏ.சி. வேலை செய்யாததால் சென்னை- பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலை அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2022-11-26 13:20 GMT

அரக்கோணம்

ஏ.சி. வேலை செய்யாததால் சென்னை- பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலை அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏ.சி. வேலை செய்யவில்லை

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து பெங்களூரு வரை செல்லும் பெங்களூரு எக்ஸ்பிரஸ் நேற்று இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு சென்றது. அப்போது ரெயிலின் ஏ.சி. பெட்டியில் (பி-5) ஏ.சி .வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அப்பெட்டியில் இருந்த பயணிகள் ரெயிலில் இருந்த டிக்கெட் பரிசோதகரிடம் இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளனர்.

ஆனால் டிக்கெட் பரிசோதகர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் கோபத்தில் பயணிகள் டிக்கெட் பரிசோதகரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

பயணிகள் போராட்டம்

இந்த நிலையில் ரெயில் நள்ளிரவு 12 மணிக்கு அரக்கோணத்திற்கு வந்தடைந்தது.

அப்போது ரெயிலில் இருந்து பயணிகள் கீழே இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ரெயில்வே அலுவலர்களிடமும் பழுது சரி செய்தால் மட்டுமே தங்களால் பயணிக்க முடியும் என கூறி வாக்குவாதம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து ரெயில்வே அலுவலர்கள் அரக்கோணத்தில் இருந்த ஏ.சி. மெக்கானிக்குகளை வரவழைத்து பழுதை சரி செய்தனர்.

1 மணி ேநரம் காலதாமதம்

இதனால் சுமார் ஒரு மணி நேரம் காலதாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது.

இந்த சம்பவத்தால் அரக்கோணம் ரெயில் நிைலயத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்