பல்லவன் எக்ஸ்பிரஸ் ெரயிலை மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும்

பல்லவன் எக்ஸ்பிரஸ் ெரயிலை மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும் என்று ெரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2022-12-18 18:45 GMT

பல்லவன் எக்ஸ்பிரஸ் ெரயிலை மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும் என்று ெரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பயணிகள் சிரமம்

மாவட்ட தலைநகரான சிவகங்கையில் இருந்து தினசரி ஏராளமானவர்கள் ெரயில் மூலம் சென்னை செல்கின்றனர். இவர்கள் சென்னை செல்வதற்கு ராமேசுவரம்-சென்னை விரைவில் மற்றும் ராமேசுவரம்-சென்னை சேது விரைவு வண்டி ஆகிய இரண்டு ெரயில் வண்டிகள் மட்டுமே தினசரி சென்று வருகிறது. செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு செல்லும் சிலம்பு அதி விரைவு ெரயில் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.

இதன் காரணமாக இப்பகுதியில் இருந்து சென்னை செல்லும் பயணிகள் போதிய டிக்கெட் கிடைக்காமல் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். இது தவிர இந்த வழியாக வட மாநிலங்களில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ெரயில்கள் நிற்காமல் செல்கின்றன.

நீட்டிக்க வேண்டும்

எனவே அயோத்தியா மற்றும் அஜ்மீர் ஆகிய இடங்களில் இருந்து வரும் வாராந்திர விரைவு ெரயில் சிவகங்கையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பல்லவன் விரைவு ெரயில் தினசரி காரைக்குடியில் இருந்து பகலில் சென்னை செல்கிறது. இந்த ெரயிலை மானாமதுரை வரை நீட்டித்து மானாமதுரையில் இருந்து சென்னை செல்லும் வகையில் நீட்டித்து தர வேண்டும்.

இதே போல திருச்சியில் இருந்து சென்னைக்கு செல்லும் ரேக்போர்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ஆக இரு ெரயில்களையும் மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது தவிர ராமேசுவரத்தில் இருந்து பனாரஸ் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலை சிவகங்கையில் நிறுத்த வேண்டும் என்று ெரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்