பகுதிநேர ரேஷன் கடை திறப்பு விழா
ஜோலார்பேட்டை அருகே பகுதிநேர ரேஷன் கடை திறப்பு விழா;
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டையை அடுத்த மூர்த்தியூர் பகுதியில் பகுதிநேர ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பொன்னேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ஜோதிகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
செயலாளர் பி.சம்பத் வரவேற்றார். திருப்பத்தூர் எம்.எல்.ஏ. நல்லதம்பி, மாவட்ட கவுன்சிலர் ஜெ.சிந்துஜா ஜெகன், ஜோலார்பேட்டை ஒன்றியக் குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க துணைத்தலைவர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பகுதிநேர ரேஷன் கடையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் கூட்டுறவு சார்பதிவாளர்கள் சண்முகம், ராமச்சந்திரன், வட்ட வழங்கல் அலுவலர் திருமலை, மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் எஸ்.கே.சதீஷ் குமார், ஒன்றிய கவுன்சிலர் சிவப்பிரகாசம், மண்டலவடி ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன், துணைத் தலைவர் நந்தகுமார் உள்பட அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் பொன்னேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உதவி செயலாளர் ரவி நன்றி கூறினார்.