பகுதி நேர ரேஷன் கடை

குடியாத்தம் செதுக்கரையில் பகுதி நேர ரேஷன் கடையை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்;

Update: 2022-12-31 18:03 GMT

குடியாத்தம்

குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் கொண்டசமுத்திரம் ஊராட்சி செதுக்கரை ஜீவா நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கட்டிடத்தையும், அந்த கட்டிடத்தில் பகுதிநேர ரேஷன் கடையையும் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமு தலைமை தாங்கினார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் எம். கார்த்திகேயன், ஒன்றியக்குழு உறுப்பினர் வி.சோபன்பாபு, ஊராட்சி மன்ற தலைவர் அகிலாண்டேஸ்வரி பிரேம்குமார், துணைத் தலைவர் ராஜாத்தி தமிழ்செல்வன், கோவிந்தாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க இயக்குனர்கள் ஜி.காமராஜ், என்.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வட்ட வழங்கல் அலுவலர் சுபிசந்தர் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் பூவை.ஜெகன்மூர்த்தி கலந்து கொண்டு புதிய கட்டிடம் மற்றும் பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு வங்கி தலைவர்கள் வனராஜ், இமகிரிபாபு, ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் சீனிவாசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ரமேஷ் குமார், நகர மன்ற உறுப்பினர் மேகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

---

2 காலம்

Tags:    

மேலும் செய்திகள்