பகுதிநேர ரேஷன் கடை கட்டிடம்

சின்னமாட்லாம்பட்டியில் பகுதிநேர ரேஷன் கடை கட்டிடம் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.;

Update:2022-05-26 20:31 IST

காரிமங்கலம்:

காரிமங்கலம் ஒன்றியம் பைசுஅள்ளி ஊராட்சி சின்னமாட்லாம்பட்டியில் ரூ.6 லட்சம் மதிப்பில் பகுதிநேர ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் யசோதா மதிவாணன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் சாந்தி பெரியண்ணன், மாவட்ட கவுன்சிலர் காவேரி, ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயபிரகாஷ் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி ரேஷன் கடை கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் சாந்தி சம்பத், கவிதா நாகராஜன், நந்தினி பிரியா செந்தில்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் கணபதி, காவேரிஅம்மாள் மாணிக்கம், கூட்டுறவு வங்கி தலைவர் சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்