விஷ பூச்சி கடித்து பரோட்டா மாஸ்டர் சாவு

சங்ககிரி அருகே விஷ பூச்சி கடித்து பரோட்டா மாஸ்டர் இறந்தார்.;

Update: 2023-01-14 19:30 GMT

சங்ககிரி:-

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ்ஷார் (வயது 34). இவர் சங்ககிரி அருகே வைகுந்தம் சுங்கசாவடி பகுதியில் உள்ள ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு கடையிலேயே படுத்து தூங்கினார். பின்னர் அதிகாலை 4 மணியளவில் சிறுநீர் கழிக்க வெளியே சென்றபோது, ஒரு விஷ பூச்சி அவரது இடது கால் பெருவிரலில் கடித்து விட்டதாக கூறப்படுகிறது. உடனே அவர் நண்பரை அழைத்து கொண்டு சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்