சுயம்புலிங்க சுவாமி கோவிலில் பரிவேட்டை நிகழ்ச்சி

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-10-25 20:00 GMT

திசையன்விளை:

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்றான உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் விஜயதசமியையொட்டி பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. சுவாமி சந்திரசேகரர் மேளதாளம் முழங்க கோவிலில் இருந்து வெள்ளி குதிரை வாகனத்தில் கடற்கரைக்கு ஊர்வலமாக புறப்பட்டு சென்றார். அங்கு வன்னிமரத்திற்கு அம்பு விட்டு பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அங்கிருந்து வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பட்ட சுவாமி சந்திரசேகரரை மனோன்மணி அம்பிகை காளை வாகனத்தில் எழுந்தருளி எதிர்கொண்டு அழைத்து வந்தார்.

பின்னர் தவனமடத்தில் சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை காளை வாகனத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி-அம்பாள் ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் செய்து இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்