பிளஸ்-2 தேர்வில்தோல்வியடைந்த மாணவர்களை பெற்றோர் அன்புகாட்டி பாதுகாக்க வேண்டும்கலெக்டர் பழனி அறிவுரை

விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களை பெற்றோர் அன்புகாட்டி பாதுகாக்க வேண்டும் என்று கலெக்டர் சி.பழனி அறிவுரை கூறியுள்ளார்.

Update: 2023-05-08 18:45 GMT


பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இத்தேர்வை விழுப்புரம் மாவட்டத்தில் 189 பள்ளிகளில் இருந்து 10,762 மாணவர்கள், 10,804 மாணவிகள் ஆக மொத்தம் 21,566 மாணவ, மாணவிகள் எழுதினார்கள். இதில் 9,366 மாணவர்கள், 10,186 மாணவிகள் என மொத்தம் 19,552 மாணவ, மாணவிகள் 90.66 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.

மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் 6 அரசு பள்ளிகள் உள்பட 45 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவர்கள், பெற்றோருக்கு அறிவுரை

அதே வேளையில் மாவட்ட கலெக்டர் என்ற முறையில், மாணவ, மாணவிகளுக்கு அன்பான வேண்டுகோளை முன்வைக்கின்றேன். நடந்து முடிந்த பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவில் தோல்வியடைந்தவர்கள் அடுத்து ஜூன் மாதம் 19-ந் தேதி தொடங்க உள்ள உடனடி தேர்வில் தேர்வு எழுதி வெற்றி பெற்று நடப்பு கல்வியாண்டிலேயே கல்லூரியில் சேர்ந்து உயர்கல்வி பயிலும் வாய்ப்பினை பெறலாம். எனவே பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு உறுதுணையாக இருந்து தோல்வியடைந்த பாடங்களில் தேர்ச்சி பெறுவதற்கு உரிய வழிகாட்டுதலை வழங்குவதோடு, அன்புகாட்டி பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்