இடஒதுக்கீடு சலுகைககள் வழங்கப்படுவதால் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் முன்வரவேண்டும்-அதிகாரிகள் அறிவுறுத்தல்

இடஒதுக்கீடு சலுகைககள் வழங்கப்படுவதால் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் முன்வரவேண்டும்-அதிகாரிகள் அறிவுறுத்தல்

Update: 2023-02-13 18:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரி அருகே உள்ள சோலூர்மட்டம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நூற்றாண்டு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சாரதா மணி தலைமை வகித்தார். கோத்தகிரி வட்டார கல்வி அலுவலர் பாலமுருகன், ஊராட்சி தலைவர் ஆல்வின், பள்ளி மேலாண்மை குழு தலைவி மலர்விழி, பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் டோனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிகாரிகள் பேசுகையில், அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்து படிக்க வைக்க பெற்றோர்கள் முன் வர வேண்டும் எனவும், அரசு பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை, பாட புத்தகங்கள், பை, காலணி, ஜாமென்ட்ரி பாக்ஸ், காலை மற்றும் மதிய உணவு வழங்கப்படுகிறது. மேலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டு சலுகைகளும் வழங்கப்படுவதால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என வலியுறுத்தினர். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், முன்னாள் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்