மாணவர்களை தெருவில் அமரவைத்து பெற்றோர் போராட்டம்

ஆலங்காயத்தில் ஆசிரியரை நியமிக்கக்கோரியும், வகுப்பறை கட்டிடத்தை சீரமைக்க வலியுறுத்தியும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல், தெருவில் அமரவைத்து, அவர்களுடன் சேர்ந்து பெற்றோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2023-10-16 18:19 GMT

வாணியம்பாடி

ஆலங்காயத்தில் ஆசிரியரை நியமிக்கக்கோரியும், வகுப்பறை கட்டிடத்தை சீரமைக்க வலியுறுத்தியும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல், தெருவில் அமரவைத்து, அவர்களுடன் சேர்ந்து பெற்றோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரே ஆசிரியர்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் பகுதியில் இயங்கி வரும் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை 81 மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணிபுரிந்து வருகிறார்.

தலைமை ஆசிரியர் கூட இல்லாமல் இந்த பள்ளி இயங்கி வருகிறது. மேலும் பள்ளி கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் பள்ளி கட்டிடம் மிகவும் மோசமடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

போராட்டம்

எனவே பள்ளிக்கு உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாணவர்களை பள்ளிக்கு அனுப்பமால், பள்ளி வளாகம் முன்பு தெருவில் மாணவர்களை அமரவைத்து, அவர்களுடன் பெற்றோரும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். அப்போது இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்