பரந்தூர் விமான நிலையம் - எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவை நோக்கி வரும் 17ம் தேதி கிராம மக்கள் நடைபயணம்

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Update: 2022-10-11 14:46 GMT

சென்னை,

காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் சென்னையின் 2-வது மிகப்பெரிய பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதற்கான அறிவிப்பினை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டு அதற்கான பணிகளை தொடங்கி உள்ளது. பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் 17ம் தேதி கிராம மக்கள் நடைபயணம் மேற்கொள்ள உள்ளனர்.சட்டப்பேரவையை நோக்கி வரும் 17ம் தேதி 13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நடைபயணம் மேற்கொள்ள உள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்