பரந்தூர் விமான நிலையம்; நில எடுப்புக்கான அறிவிப்பு வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது.;

Update:2024-03-12 10:09 IST

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விமான நிலையம் அமைக்க நில எடுப்புக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி காஞ்சிபுரம் அருகே சிறுவள்ளூர் கிராமத்தில் 1.75 லட்சம் சதுர மீட்டர் அளவிலான நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும், நில எடுப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள் 30 நாட்களுக்குள் தங்கள் ஆட்சேபனையை தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலைய திட்ட வருவாய் அலுவலருக்கு ஆட்சேபனையை எழுத்து மூலமாக தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 30ம் தேதி விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பொடவூர் கிராமத்தில் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்