பண்ணாரி அம்மன் கோவிலில் பழுதான தங்கத்தேர் குடை சீரமைப்பு
தங்கத்தேர் குடை;
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நாள்தோறும் மாலை 6.15 மணிக்கு அம்மன் தங்கத்தேரில் உலா வருவார். பக்தர்களும் வேண்டுதலுக்காக கட்டணம் செலுத்தி தங்கத்தேர் இழுப்பதுண்டு. இந்தநிலையில் தங்கத்தேரில் பொருத்தப்பட்டு உள்ள குடை பழுதானது. 3 மாதங்களுக்கு முன்பு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோவிலுக்கு வந்தபோது குடையை சரிசெய்ய உத்தரவிட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து குடை சரிசெய்யப்பட்டது.
இந்தநிலையில் நேற்று கோவிலின் துணை ஆணையரும், தங்க நகை சரி பார்க்கும் அலுவலருமான ரமேஷ் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் முன்பாக தங்க குடை பொருத்தப்பட்டது. அப்போது கோவில் செயல் அலுவலர் மேனகா, அறங்காவலர்கள் புருஷோத்தமன், ராஜா மணி தங்கவேல், கண்காணிப்பாளர் பாலசுந்தரி, மேலாளர் தமிழ் செல்வன் உள்பட பலர் உடன் இருந்தனர்.