பைரவர் கோவில் குடமுழுக்கு பந்தல்கால் நடும் நிகழ்ச்சி
வாய்மேடு அருகே பைரவர் கோவில் குடமுழுக்கு பந்தல்கால் நடும் நிகழ்ச்சி
வாய்மேடு:
வாய்மேடு அருகே தகட்டூர் பைரவர் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். வடக்கே காசியிலும் தெற்கே தகட்டூரில் மட்டுமே பைரவர் மூலவராக அருள் பாலிக்கிறார். இத்தகைய பிரசித்தி பெற்ற இக்கோவிலில் குடமுழுக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 17-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி குடமுழுக்கிற்கான பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் கவியரசு, ஆய்வர் ராமதாஸ், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் அமிர்தகடேஸ்வரன், ஒன்றியக்குழு உறுப்பினர் செல்லமுத்து எழிலரசன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் கோவிந்தசாமி, கோவில் எழுத்தர் அன்புகார்த்தி மற்றும் கோவில் மருளாளிகள், உபயதாரர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.