குப்பைகளை எரிக்கும் ஊராட்சி பணியாளர்கள்

குப்பைகளை எரிக்கும் ஊராட்சி பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2023-05-24 18:26 GMT

ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பாச்சல் ஊராட்சியில் துரை நகர் பகுதியில் சேரும் குப்பைகளை ஊராட்சி பணியாளர்களே தீயிட்டு எரிக்கின்றனர். மேலும் குப்பைகளை அங்குள்ள கால்வாயில் கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குப்பைகளை எரிக்கும் போது புகை மண்டலமாக காட்சியளித்து, அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. எனவே குப்பைகளை கொட்டி எரிக்கும் ஊராட்சி பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்