மகளை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு ஊராட்சி செயலாளர் தற்கொலை

கே.வி.குப்பம் அருகே மனவளர்ச்சி குன்றிய மகளை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, ஊராட்சி செயலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-19 17:56 GMT

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஊராட்சி செயலாளர்

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த காங்குப்பம், விநாயகநகர், பெருமாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மு.பாபு (வயது 48). காங்குப்பம் ஊராட்சி செயலாளராக வேலைபார்த்து வந்தார். இவரது மனைவி வேண்டாலட்சுமி மாச்சனூரில் அங்கன்வாடி பணியாளராக வேலைபார்த்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள்.

மூத்த மகள் லோசினி (18) வேலூரில் தனியார் கல்லூரியில் படித்துவருகிறார். இளைய மகள் தனுஜா (16) மனவளர்ச்சி குன்றியவர். தனுஜா சில நேரங்களில் எங்கு போகிறார் என்று தெரியாமல் வீட்டை விட்டு சென்று விடுவார். அவரைத் தேடிப் பிடித்து வீட்டுக்கு கொண்டு வருவார்கள். பருவ வயது வந்தும், தனுஜா மன வளர்ச்சி குன்றிய நிலையில் இருந்து வந்தது வீட்டில் உள்ள அனைவருக்கும் மனவருத்தத்தை ஏற்படுத்தியது.

மகளை கொன்று தற்கொலை

இந்தநிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனுஜாவை, தந்தை பாபு கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, அவரும் கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி மற்றும் போலீசார் விரைந்து சென்று பாபு, தனுஜா ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவுசெய்து தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில், பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்