விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலாளர் கைது
விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலாளர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிள்ளையார்குளம் ஊராட்சியில் கடந்த 2-ந் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயி அம்மையப்பனை, ஊராட்சி செயலாளர் தங்கப்பாண்டியன் (வயது 48) தாக்கினார். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கப்பாண்டியனை தேடி வந்தனர். இந்தநிலையில் வன்னியம்பட்டி போலீசார் நேற்று பிள்ளையார்குளம் அருகே தங்கப்பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.