பஞ்சாயத்து கூட்டம்

முடிவைத்தானேந்தல் பஞ்சாயத்து கூட்டம்

Update: 2022-07-21 16:51 GMT

சாயர்புரம்:

முடிவைத்தானேந்தல் பஞ்சாயத்து கூட்டம் பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பஞ்சாயத்து தலைவர் ரம்யா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் நல்லசிவம் வரவேற்றார். கூட்டத்தில், பஞ்சாயத்து 8-வது வார்டு இடைத்தேர்தலில் வென்ற பேச்சியம்மாளுக்கு தூத்துக்குடி யூனியன் மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரி ஆபிரகாம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்