தலைமை செயலகத்தை முற்றுகையிட ஊராட்சி தலைவர்கள் முடிவு
தலைமை செயலகத்தை முற்றுகையிட ஊராட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.;
தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம், திருச்சியில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் முனியாண்டி தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் ஆரணி ராஜா முன்னிலை வகித்தார். கூட்டத்தில், ஊராட்சிகளின் அனைத்து வங்கி கணக்குகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வருதல் ஏற்புடையது அல்ல. ஊராட்சி செயலர்களுக்கு அதிகார பகிர்வாக 3-வது கையொப்பம் இடுவதும், அவர்களுக்கு ரகசிய குறியீட்டு எண் வழங்க ஆவன செய்வதையும் அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காத பட்சத்தில் தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும் தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக சென்று முற்றுகையிடுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.