பஞ்சாயத்து தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்

ஆலங்குளம் பஞ்சாயத்து தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.;

Update: 2023-06-18 19:00 GMT

ஆலங்குளம்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் யூனியன் அலுவலகத்தில் வைத்து 32 கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கான கிராம வளர்ச்சி சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தினகராஜ் மற்றும் விஜயகணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கிராம வளர்ச்சி திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அலுவலக வளாகத்தில் வைத்து முதியோர்களுக்கான கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பஞ்சாயத்து தலைவர்கள், அலுவலக ஊழியர்கள் பொதுமக்கள் ஆகியோர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்