ஊராட்சி மன்ற செயலாளர் தற்கொலை முயற்சி

ஊராட்சி மன்ற செயலாளர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.;

Update: 2023-09-30 18:34 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, தெரணி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 52). இவர் காரை கிராம ஊராட்சி மன்ற செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று வீட்டில் இருந்த போது தனது காதில் பூச்சி கொல்லி மருந்து (விஷம்) ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதனை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்