பா.ஜ.க.வினர் துண்டு பிரசுரம் வினியோகம்
உடன்குடியில் பா.ஜ.க.வினர் துண்டு பிரசுரம் வினியோகம் நடந்தது.
உடன்குடி:
உடன்குடி ஒன்றிய பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பிரசாரம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய தலைவர் ஆழகேசன் தலைமை தாங்கினார். சந்தையடியூர், சிவலூர், கொட்டங்காடு, வேப்பங்காடு, பரமன்குறிச்சி, குலசேகரன்பட்டினம் ஊள்ளிட்ட பகுதிகளில் கட்சியினர் வீடுவீடாக சென்று மத்திய அரசின் சாதனைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வினியோகம் செய்தனர். இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொதுச்செயலர் சிவமுருகன் ஆதித்தன், மாவட்ட துணைத்தலைவர் ராமக்கனி, ஒன்றிய மகளிரணித் தலைவி தமிழ்ச்செல்வி உட்பட திரளான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.