அனுமதியின்றி வெட்டப்பட்ட பனைமரங்கள்
அனுமதியின்றி பனைமரங்கள் வெட்டப்பட்டது.;
அன்னவாசல் அருகே மாங்குடியில் அனுமதியின்றி பனைமரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அப்பகுதியினர் வருவாய்த் துறையினரிடம் புகார் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறையினர், அனுமதியின்றி பனை மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். உள்ளூரை சேர்ந்த சிலர் வெளியூர் ஆட்களை வைத்து அனுமதி இல்லாமல் பனைமரங்களை வெட்டி விட்டு அந்த பனை மரத்திற்கு உரிமையாளர்களிடம் ரூ.200 வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் எங்கள் அனுமதியின்றி எப்படி மரங்களை வெட்டினார்கள் என அவர்களிடம் பணத்தை வாங்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.