பனையம்பள்ளிஊராட்சி அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை

பனையம்பள்ளி ஊராட்சி அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனா்.

Update: 2023-09-30 20:51 GMT

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள பனையம்பள்ளி ஊராட்சியில் நேற்று முன்தினம் மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் பணி செய்யவில்லை என கூறி உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல் தொழிலாளர்களின் அட்டையை வாங்கி சென்று விட்டார்.

இதைத்தொடர்ந்து தொழிலாளர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் ஊராட்சி மன்ற தலைவர் நாகேந்திரன் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி, தொழிலாளர்களுக்கு வேலை அட்டையை பெற்றுக்கொடுத்தார். அதைத்தொடர்ந்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்