பழனி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம்

பழனி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.;

Update: 2023-02-03 19:12 GMT

தாயில்பட்டி, 

ஏழாயிரம் பண்ணையில் அண்ணாவி நாடார் வகையறாக்களுக்கு பாத்தியப்பட்ட பழனி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிேஷகம் நடந்தது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, மூலவர் பழனி ஆண்டவருக்கு 11 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜை, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மாலை 5 மணிக்கு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. பழைய ஏழாயிரம் பண்ணையில் தொடங்கிய வீதி உலா ஏழாயிரம் பண்ணை பராசக்தி மாரியம்மன் கோவில் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றது. கும்பாபிேஷ கத்தைெயாட்டி கோவில் வளாகத்தில் பட்டிமன்ற நிகழ்ச்சி உள்ளிட்ட பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியின் தலைவர் பழனிராஜன், பொதுச்செயலாளர் நடராஜன், செயலாளர் அன்பழகன், பொருளாளர் பழனிக்குமார் மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்