வேலூர் கோட்டை அருங்காட்சியகத்தில் ஓவிய பயிற்சி
வேலூர் கோட்டை அருங்காட்சியகத்தில் ஓவிய பயிற்சி வழங்கப்பட்டது.;
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வேலூர் கோட்டை அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவிய பயிற்சி முகாம் நடைபெற்றது. அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் தலைமை தாங்கினார். செல்லியம்மன் கோவில் செயல் அலுவலர் பரந்தாமக்கண்ணன் தொடங்கி வைத்தார்.
பயிற்சியாளர் செல்வகணேஷ் பயிற்சி வழங்கினார். இதில் 17 பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்று பயிற்சி பெற்றனர். அவர்களுக்கு ஓவியம் வரைதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டது.