ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான்கோவில் சித்திரை திருவிழா:பூப்பல்லக்கில் சுவாமி திருவீதி உலா

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான்கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பூப்பல்லக்கில் சுவாமி திருவீதி உலா நடந்தது.;

Update: 2023-04-18 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் பெருமாள் கோவில் சித்திரை திருவிழா வரும் கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள், புறப்பாடு, திருவீதி உலா நடைபெற்று வருகிறது.

நேற்றுமுன்தினம் 7-ம் திருவிழாவில் ஸ்ரீகள்ளபிரான் பெருமாள், ஆண்டாள் திருக்கோலத்தில் கோவிலில் இருந்து பூப்பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீவைகுண்டம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பாக நடந்த இந்த விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு கள்ளபிரான் பெருமாளை தரிசித்தனர். இதில், கோவில் செயல் அலுவலர் கோவலமணிகண்டன், ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி, ஆய்வாளர் நம்பி, வியாபாரி சங்க தலைவர் காளியப்பன், துணைத் தலைவர் கந்தசிவசுப்பு, செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்