மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது.;
வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சத்துவாச்சாரியில் உள்ள தனியார் செவித்திறன் குறையுடையோர் பள்ளியில் வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சரவணன் முன்னிலையில் போட்டி நடந்தது. இதில் மாற்றுத்திறன் கொண்ட 20 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். அவர்கள் வாக்காளர் தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியங்களை வரைந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.