பெயிண்டர் கழுத்தை அறுத்து படுகொலை
முன்விரோத தகராறில் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்து பெயிண்டரை ஒரு கும்பல் கழுத்தை அறுத்து படுகொலை செய்தது. இது ெதாடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.;
மேட்டூர்:-
முன்விரோத தகராறில் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்து பெயிண்டரை ஒரு கும்பல் கழுத்தை அறுத்து படுகொலை செய்தது. இது ெதாடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பெயிண்டர்
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள தொட்டில்பட்டியை சேர்ந்தவர் ரகு என்கிற ரகுநாதன் (வயது 29). பெயிண்டர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வெள்ளையன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கை கலப்பாக மாறியது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் தகராறில் காயம் அடைந்ததால், நேற்று முன்தினம் இரவு ரகுநாதன் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக சென்றார். அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்க நர்சுகள் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். இதனிடையே அவரை பின்தொடர்ந்து வந்த ஒரு கும்பல், அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்தது.
கழுத்தை அறுத்து...
ஆஸ்பத்திரிக்குள் சிகிச்சைக்காக அமர்ந்திருந்த ரகுநாதனை, அந்த கும்பலை சேர்ந்தவர்கள் பிடித்துக்கொண்டு கத்தியால் கழுத்தை அறுத்தனர். இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்த ரகுநாதன் அங்ேகயே துடிதுடித்து இறந்தார். கண்இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்த நர்சுகள், நோயாளிகள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். மேலும் அவரை கொன்ற கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.
இது குறித்து தகவல் அறிந்தவுடன் மேட்டூர் போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
4 பேர் கைது
தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெள்ளையன் என்கிற மாரி கவுண்டர் (37), மேட்டூர் ஜீவா நகரை சேர்ந்த மூர்த்தி (36), நாட்டமங்கலம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (30) மற்றும் நிவாஷ் (19) ஆகிய 4 பேரை கைது விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்து போன ரகுநாதனுக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
முன்விரோதத்தில் ஆஸ்பத்திரிக்குள் பெயிண்டர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.