சின்னசேலம்
சின்னசேலம் அருகே தென்பொன்பரப்பி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 54). பெயிண்டரான இவர் சம்பவத்தன்று காலை தென்பொன்பரப்பியில் இருந்து மொபட்டில் வேலைக்காக சின்னசேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அம்மையகரம் தனியார் திருமண மண்டபம் அருகே வந்தபோது பின்னால் வந்த கார் ராஜேந்திரன் ஓட்டி வந்த மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.