பஸ் மோதி காயமடைந்த பெயிண்டர் சாவு

ஜோலார்பேட்டை அருகே பஸ் மோதி காயமடைந்த பெயிண்டர் இறந்தார்.

Update: 2023-05-25 19:04 GMT

ஜோலார்பேட்டையை அடுத்த லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் அண்ணாமலை (வயது 25). பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மாலா என்கின்ற மனைவி உள்ளார். அவர் தற்போது 5 மாதம் கர்ப்பிணியாக உள்ளார். இந்தநிலையில் அண்ணாமலை கடந்த 19-ந்் தேதி சொக்கலம்பட்டி பகுதிக்கு மொபட்டில் சென்றுவிட்டு வீடு திரும்பினார். ஆசிரியர் நகர் செல்லும் சாலையில் சென்ற போது அச்சமங்கலம் பகுதியில் பின்னால் வந்த தனியார் பஸ் அண்ணாமலை மொபட் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்