மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெயிண்டர் சாவு

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெயிண்டர் சாவு

Update: 2022-11-03 18:45 GMT

தக்கலை:

இரணியல் அருகே உள்ள வடக்கு ஆழ்வார்கோவில் பகுதியை சேர்ந்தவர் சிவகுருநாதன் (வயது 51), பெயின்டர். இவர் நேற்று முன்தினம் இரவு தக்கலையில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். முத்தலக்குறிச்சி பகுதியில் வந்தபோது, திடீரென ஒரு மர்ம நபர் சாலை கடக்க முயன்றார். இதைகண்ட சிவகுருநாதன், அந்த மர்ம நபர் மீது மோதாமல் இருப்பதற்காக திடீரென பிரேக்கை பிடித்தார். இதில் நிலைதடுமாறிய சிவகுருநாதன் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிவகுருநாதன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிவகுருநாதனின் மனைவி எழில்நேச சிந்தியா (42) கொடுத்த புகாரின்பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்