விஷம் குடித்து பெயிண்டர் தற்கொலை
விருதுநகர் அருகே விஷம் குடித்து பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.;
விருதுநகர் அருகே உள்ள சூலக்கரைமேட்டை சேர்ந்தவர் சுசேந்திரன் (வயது 57). பெயிண்டரான இவருக்கு கடந்த 10 ஆண்டுகளாக மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் சமீபகாலமாக தூக்கம் வராத நிலையில் அதற்கான மாத்திரைகளும் சாப்பிட்டு வந்த சுசேந்திரன் சம்பவத்தன்று மதுவுடன் சேர்த்து எலிமருந்தை குடித்துவிட்டு அதிகமான தூக்க மாத்திரைகளையும் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. உடனே அவரை சிகிச்சைக்காக விருதுநகர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்தநிலையில் அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அவரது மகன் திலீப் குமார் (25) கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.