தீ விபத்தில் கணவன், மனைவி காயமடைந்த சம்பவத்தில் பெயிண்டர் கைது

தீ விபத்தில் கணவன், மனைவி காயமடைந்த சம்பவத்தில் பெயிண்டர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-29 17:57 GMT

ராணிப்பேட்டை

தீ விபத்தில் கணவன், மனைவி காயமடைந்த சம்பவத்தில் பெயிண்டர் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை அருகே உள்ள வாணாபாடி பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 68). மளிகை கடை வைத்துள்ளார். இவர் கடந்த 25 ந்தேதி மகன் சக்கரவர்த்தியுடன் (40) மளிகை கடையில் இருந்துள்ளார். அப்போது கடைக்கு தனது மைத்துனர் கோபியை (46) அழைத்திருந்தார். அதன்பேரில் கோபி தனது தீபாவுடன் (40) கடைக்கு வந்தார்.

அப்போது தாங்கள் வைத்திருந்த பட்டாசு பார்சலை பிரித்துள்ளனர். அந்த நேரத்தில் சக்கரவர்த்தியின் மகன் பிரஜாத் லோபோ (10) என்பவர் சங்கு சக்கர பட்டாசை அங்கு வெடித்துக் கொண்டு இருந்தார். அந்தப் பட்டாசிலிருந்து பறந்த தீப்பொறி கோபி பிரித்து வைத்திருந்த பட்டாசு மீது விழுந்தது.

.அப்போது பட்டாசு பார்சல் வெடித்ததில், கோபியும், அவரது மனைவி தீபாவும் தீ விபத்தில் சிக்கினர். அவர்கள் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அதில் வீடு ஏலப்பிரச்சினை காரணமாக, முன் விரோதம் இருந்து, அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த பெயிண்டிங் தொழில் செய்யும் ரமேஷ் என்பவர், தான் வைத்திருந்த திரவத்தை கோபி மற்றும் தீபா மீது தீ விபத்து நடக்கும் போது ஊற்றியதாக விசாரணையில் தெரிய வந்தது. இதனை அடுத்து சிப்காட் போலீசார் ரமேஷை கைது செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்