ஆம்புலன்ஸ் கண்ணாடியை சேதப்படுத்திய பெயிண்டர் கைது
ஆம்புலன்ஸ் கண்ணாடியை சேதப்படுத்திய பெயிண்டர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ள கீழபுதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 33). இவர் சம்பவத்தன்று ஆம்புலன்சில் இறந்தவரின் உடலை ஏற்றிக்கொண்டு கருப்பத்தூர் பஸ் நிலையம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது கருப்பத்துறையை சேர்ந்த பெயிண்டர் மணிவண்ணன் (26) என்பவர் ஆம்புலன்சை வழிமறித்து, உதயகுமாரை தகாதவார்த்தையால் திட்டி ஆம்புலன்சின் கண்ணாடியை உடைத்துசேதப்படுத்தினார். இதுகுறித்து உதயக்குமார் கொடுத்த புகாரின்பேரில், லாலாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் வழக்குப்பதிந்து, மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.