நீடாமங்கலத்தில் இருந்து தர்மபுரிக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்
நீடாமங்கலத்தில் இருந்து தர்மபுரிக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இருந்து தர்மபுரிக்கு அரவைக்காக 2 அயிரம் டன் நெல்லை சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கும் பணி நடந்தது. இதை முன்னிட்டு நீடாமங்கலம், மன்னார்குடி தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் நெல், 157 லாரிகளில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் நெல் மூட்டைகளை சுமைதூக்கும் தொழிலாளர்கள் சரக்கு ரெயிலின் 42 பெட்டிகளில் அடுக்கி வைத்தனர். இதையடுத்து 2 ஆயிரம் டன் நெல்லுடன் சரக்கு ரெயில் தர்மபுரிக்கு புறப்பட்டு சென்றது.