நெல்கொள்முதல் பணி மும்முரம்

நீடாமங்கலம் பகுதியில் நெல் கொள்முதல் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.;

Update: 2023-01-27 18:50 GMT

நீடாமங்கலம்;

நீடாமங்கலம் பகுதியில் நெல் கொள்முதல் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

குறுவை சாகுபடி

நீடாமங்கலம் வேளாண்மை கோட்டத்தில் அறுவடை செய்த நெல் அரசு கொள்முதல் நிலையங்களில் மும்முரமாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. டெல்டா மாவட்ட விவசாயிகள் பயன் பெறும் வகையில் மேட்டூர் அணையை முன் கூட்டியே குறுவை சாகுபடிக்கு திறந்ததால் நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் 34.808 ஏக்கரில் குறுவை சாகுபடி முடிந்தது.

கொள்முதல்

சம்பா பருவத்தில் ஒரு போகம் மட்டும் சம்பா சாகுபடியை சுமார் 8,448 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் செய்தனர். இதன்படி நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் ரிஷியூர், கட்டையடி, பெரம்பூர், முல்லைவாசல், பூவனூர், பருத்திக்கோட்டை, காளாச்சேரி, மேலபூவனூர், ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் எந்திர அறுவடை பணி நடை பெற்று பல்வேறு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணி நடைபெற்று வருகிறது. இயற்கை ஒத்துழைப்பு இருந்தால் கொள்முதல் பணி தொய்வில்லாமல் நடக்கும். விவசாயிகளுக்கும் மகிழ்ச்சியளிக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்