பச்சைக்காளி, பவளக்காளி வீதி உலா
வைத்தீஸ்வரன் கோவிலில் பச்சைக்காளி, பவளக்காளி வீதி உலா நடந்தது.
சீர்காழி:
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் மந்தக்கருப்பண்ணசாமி, ஏழைக்காத்தம்மன், காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று கோவிலில் காளியம்மனுக்கு திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். இதை தொடர்ந்து பச்சைக்காளி, பவளக்காளி வீதி உலா நடந்தது. வீதி உலா முக்கிய வீதிகளின் வழியாக சென்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காயத்ரி தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.