பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
சிவகிரியில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிவகிரி:
பால் விலை, மின்சார கட்டணம், சொத்து வரி உயர்வை கண்டித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் தென்காசி மாவட்டம் சிவகிரி பஸ்நிலையம் அருகே பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தலைவர் சோழராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய பொதுச்செயலாளர்கள் கந்தசாமி, சுப்பிரமணியன், ஒன்றிய பொருளாளர் மாடசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிவகிரி நகர தலைவர் ஒரு சொல் வாசகன், தொழிலதிபர் விசுவை ஆனந்தன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் பால்ராஜ், மாவட்ட ஓ.பி.சி. அணி பொதுச்செயலாளர் ஜெயகோதண்ட ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.