மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு
கடமலைக்குண்டு அருகே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையால் மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கடமலைக்குண்டு அருகே கோம்பைதொழுவில் சின்னசுருளி என்று அழைக்கப்படும் மேகமலை அருவி உள்ளது. இயற்கை எழில்சூழ அமைந்துள்ள இந்த அருவிக்கு தேனி மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல் உள்பட வெளிமாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.
இந்தநிலையில் தொடர் மழை காரணமாக மேகமலை அருவியில் கடந்த சில நாட்களாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இந்தநிலையில் இன்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் மேகமலை அருவியில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. மாலையில் வெள்ளப்பெருக்கு குறைந்தது.