வெளி மாநில மதுபாட்டில்கள், புகையிலை பொருட்களை கடத்தியவர் சிக்கினார் - கார் பறிமுதல்

வெளி மாநில மதுபாட்டில்கள், புகையிலை பொருட்களை கடத்தியவர் சிக்கினார் . கார் பறிமுதல் செய்யப்பட்டது;

Update: 2023-05-20 20:49 GMT


மதுரை கூடல்புதூர் போலீசார் அவர்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது கூடல்புதூர் அலங்காநல்லூர் சோதனைசாவடி பகுதியில் வாகன சோதனை செய்த போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் வெளிமாநில மது பாட்டில்கள், தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட் பண்டல்கள் மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. அதை தொடர்ந்து போலீசார் காரில் வந்தவரை விசாரித்தனர். அதில் சிவகங்கை வாசுதேவபிள்ளைத்தெருவை சேர்ந்த ராஜகோபால் (வயது 29) என்பதும், இவர் வெளிமாநிலங்களில் இருந்து மதுபாட்டில்கள், புகையிலை பண்டல்களை விற்பனைக்கு கொண்டு வந்ததும் தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து, காருடன் அந்த பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்