வெளி மாநில மது பாட்டில்கள் விற்றவர் கைது

ஜோலார்பேட்டை அருகே வெளி மாநில மது பாட்டில்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-01-13 17:50 GMT

ஜோலார்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சின்னப்பொன்னேரி பகுதியில் வெளி மாநில மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த வேலு என்பவரின் மகன் பரந்தாமன் (வயது 38) என்பவரை போலீசார் கைதுசெய்தனர்.

மேலும் அவரிடமிருந்து 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்