தூத்துக்குடியிலுள்ள 3 பள்ளிகளில் 339 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்:அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
தூத்துக்குடியிலுள்ள 3 பள்ளிகளில் 339 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
இலவச சைக்கிள்
தூத்துக்குடியில் உள்ள சி.எம்.மேல்நிலைப்பள்ளியில் 66 மாணவ, மாணவிகளுக்கும், காரப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 253 பேருக்கும், சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளியில் 20 பேருக்கும் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நிகழ்ச்சிகளுக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிளை வழங்கினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சிகளில் முதன்மை கல்வி அதிகாரி ரெஜினா, சி.எம். பள்ளி தாளாளர் வள்ளியம்மாள், தலைமை ஆசிரியை சங்கரேசுவரி, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சித்ரா, மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், வடதிசை இந்துநாடார் மகமை பரிபாலன சங்க செயலாளர் விநாயகமூர்த்தி, காரப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை லதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்துல்கலாம் படத்துக்கு மரியாதை
முன்னதாக, சி.எம். மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்துக்கு அமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.