உயர்கல்விக்கான வழிகாட்டுதல் முகாம்

உயர்கல்விக்கான வழிகாட்டுதல் முகாம் இன்று நடக்கிறது.

Update: 2023-06-26 19:39 GMT


அருப்புக்கோட்டை ஏ.என்.யு.டி. மகாலில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கடந்த கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர விண்ணப்பிக்காத மாணவ- மாணவியர்களுக்கு உயர் கல்விக்கான வழிகாட்டுதல் முகாம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான உயர் கல்வி படிப்புகள், அவை தொடர்பான வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்களை எளிதில் பெறும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் முகாம் மூலம் உதவிகள் வழங்க தொடர்ச்சியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசின் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து நடத்தும் உயர் கல்விக்கான வழிகாட்டுதல் முகாம் இன்று அருப்புக்கோட்டையில் நடைபெறுகிறது. முகாமில் தனியார் கல்லூரிகளும் கலந்து கொண்டு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்து எடுத்துரைக்கின்றனர். எனவே மாணவர்கள் தங்கள் உயர்கல்விக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் உதவிகள் பெறுவதற்கு இந்த முகாமினை பயன்படுத்திக் கொள்ளலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்