மழைநீர் வடிகால் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது - அமைச்சர் கே.என்.நேரு

மழைநீர் பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

Update: 2024-08-17 01:43 GMT

சென்னை,

சென்னையில் வடகிழக்கு பருவமழை குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில், மாநகராட்சி, குடிநீர் வாரியம், நெடுஞ்சாலை, மின்வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, மதிவேந்தன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் மழைநீர் பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது,

மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, 792 கி.மீ. நீள மழைநீர் வடிகால்களில் தூர்வாரப்பட்டு வருகிறது. இதுவரை 611 கி.மீ. நீளத்துக்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அதிகாரிகள் தனியாக ஆய்வு செய்யாமல், மக்கள் பிரதிநிதிகளையும் அழைத்து செல்ல கூறியுள்ளோம். மழைக்காலம் முடியும் வரை, அதிகாரிகளை மாற்றக்கூடாது என அறிவுறுத்தியுள்ளோம். என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்