தென்மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
சென்னை,
தென்இலங்கை கடற்கரை பகுதியை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அநேக இடங்களிலும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி நேற்று இரவு முதல் கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.